திருப்பதியில் நயன்தாரா செய்த காரியத்தால் கொந்தளித்த தேவஸ்தான நிர்வாகம்…!!! திருமணம் ஆன அடுத்த நாளே சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நயன்தாரா…!!!

nayanthara vigneshshivan tirupati temple

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை. நேற்று தான் தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. ஆனால் திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவை அழைத்துக்கொண்டு இன்று திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம் செய்ய திருப்பதி சென்றுள்ளார்.

கோவில் வளாகத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வந்து கொண்டிருந்தபோது விக்னேஷ் சிவன் வெறுங் காலில் நடந்து வந்துள்ளார் ஆனால் நயன்தாரா கோவில் வளாகத்திலேயே செருப்புக் காலுடன் வந்துள்ளார்.

இதனை பார்த்த தேவஸ்தான நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் வளாகத்தில் செருப்பில்லாமல் நடக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவர தேவஸ்தான நிர்வாகம் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது தேவஸ்தானத்தில் உள்ள தலைவர்களுடன் கலந்து யோசித்த பின் சொல்லப்படும் என்கிறார்கள்.

திருப்பதி கோவில் வளாகத்தில் யாரும் செருப்பு அணிந்து நடக்க கூடாது என்பது திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டளை ஆனால் அதை மீறி நயன்தாரா செருப்பு அணிந்து வந்தது தவறு என்கிறார்கள் அங்குள்ள ஒரு படம்.

கணவர் விக்னேஷ் சிவன் வெறுங் காலுடன் நடக்கும் போது நயன்தாரா மட்டும் ஏன் இப்படி செய்தார் என்று சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.