நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்…!!! வருத்தத்தில் குடும்பத்தினர் என்ன நடந்தது தெரியுமா..?

nayanthara wedding

இயக்குனர் விக்னேஷ் நடிகை நயன்தாரா திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் நடந்து முடிந்தது 10.25 மணிக்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு தாலி கட்டியதாக தகவல்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா பின் திருமணத்திற்கு பிரபலங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இதற்காகவே சென்னைக்கு வந்து நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி சென்றுள்ளார்.

ரஜினி, நடிகர் கார்த்தி, விக்ரம் பிரபு, தொகுப்பாளினி டிடி, அஜித் குமார் இன்று பிரபலங்கள் மகாபலிபுரத்தை நோக்கி படையெடுத்தனர். விஐபிகள் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு மண்டபத்திற்கு கொடுக்கப்பட்டிருந்தது அதுபோல QR CODE காட்டிதான் மண்டபத்திற்குள் நுழையும் வசதி செய்யப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.

Vigneshshivan with nayanthara parents

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மற்றும் பெரியம்மா வருத்தத்துடன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளனர் என்னுடைய தம்பி மகன் தான் விக்னேஷ் சிவன் அவன் அடிக்கடி லீவு நேரத்தில் இங்கு வருவான் எங்களுடன் தான் வெளியிடங்களுக்கு செல்வான் நாங்கள் தான் விக்னேஷ் சிவனுக்கு ரிகாரங்கள் செய்யக்கோரி கூறியிருந்தோம் கடைசியில் எங்களுக்கே திருமண பத்திரிக்கை வைக்காதது கஷ்டமாக இருக்கிறது.

நானே மனதார வாழ்த்துகிறேன் இந்த அம்மாவுக்கு இவனும் இவனுக்கு அந்த அம்மாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையாக இருந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை என்று விக்கியின் பெரியப்பா கூறி உள்ளார்.

திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை திருமணத்திற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து விருந்துக்கு வந்தால் கூட சந்தோசப்படுவேன் எப்ப வந்தாலும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனின் பெரியம்மா.

தனது குடும்பத்தினரையே திருமணத்திற்கு விக்னேஷ் சிவன் அழைக்காதது அவர்களுக்கு சற்று வருத்தம் தான்.