நயன்தாராவின் திருமணம் எந்த முறைப்படி நடந்துள்ளது தெரியுமா…!!! முதல் முதலாக வெளியான தகவல்.

nayanthara wedding style

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் இன்று 10:25 மணிக்கு நடைபெற்றது. நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விஐபிகள் மாமல்லபுரம் RESORT நோக்கி படையெடுத்தனர்.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற நயன்தாராவின் திருமணம் பற்றி தற்பொழுது சில தகவல்கள் கிடைத்துள்ளது. நயன்தாரா கிறிஸ்துவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ஆனால் நயன்தாராவின் திருமணம் ஹிந்து முறைப்படி நடந்து உள்ளது.

திருமணத்தில் 20 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இந்து முறைப்படி நடந்ததாகவும் ஆகம விதிமுறைப்படி நடந்து முடிந்ததாக நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட சாம்ப குருக்கள் புரோகிதர் கூறியுள்ளார்.

திருத்தணி மயிலாப்பூர் வடபழனி திருத்தணி திருவண்ணாமலை போன்ற இடங்களில் இருந்து புரோகிதர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

பிரமாதமாக திருமணம் நடந்து முடிந்தது ஒரு குறையும் இல்லை ஆனந்தமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஐபிக்கள் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆனந்தமான பொருத்தம் நல்ல வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விட்டு சென்று உள்ளார் புரோகிதர்.