தொகுப்பாளினி டிடியின் அக்கா கடல் அலையில் சிக்கி கொண்டாரா..? இறுதியில் நடந்த ட்விஸ்ட்.

DD

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றியவர் திவ்யதர்ஷினி. இவரை அனைவரும் டிடி என்று செல்லமாக அழைப்பார்கள். இவரின் சகோதரி பிரியதர்ஷினி சில வருடங்களுக்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

பிரியதர்ஷினி நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது நடனமாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதுவும் விஜய் டிவி மற்றும் சன் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

தற்போது கடற்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து நடனம் ஆடுவதை வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென கடல் அலை வேகமாக அடித்ததால் பாறையிலிருந்து தண்ணீரில் விழுந்துள்ளார்.

இதனை காமெடியாக எடிட் செய்து சூட்டிங் பரிதாபங்கள் என பெயரிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.