சிவகார்த்திகேயன் பட நாயகி தியேட்டரில் செய்த வேலைய பாருங்களேன்…!!! வைரலாகும் வீடியோ.

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அனைத்து தரப்பினர் இடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை பெற்று வருகிறது. அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படம் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கான போஸ்ட் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் தயாராகும் SK20 ,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் SK21 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக பிரபல மலையாள நடிகை சாய்பல்லவி ஒப்பந்தமாகி உள்ளார். சிவகார்த்திகேயனும் சாய்பல்லவி ஜோடி முதல் முறையாக ஜோடி சேர்வதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை சாய் பல்லவி 2017 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து தமிழில் மாரி 2 ,என் ஜி கே என்னும் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அண்மையில் சாய் பல்லவி நடிப்பில் ஷியாம் சிங்க ராய் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படத்தை காண திரையரங்கிற்கு வந்துள்ளார். படம் முடிந்ததும் திரையரங்கில் முகம் தெரியாத அளவிற்கு மறைத்துக்கொண்டு வெளியே செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.