கழிவறை இல்லாததால் திருமணமான ஒரு மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுப்பெண்…!!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.

கடலூர் மாவட்டம் புதுநகர் மந்தவெளி சாலை பகுதியை சேர்ந்தவர் ரம்யா 27 ரம்யா கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகண்டார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டார் பெற்றோரும் சம்மதித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் ரம்யா தன் பெற்றோர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரம்யாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ரம்யா மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவின.

திருமணத்திற்கு பிறகுதான் கார்த்திகேயன் வீட்டில் கழிவறை வசதி இல்லாதது ரம்யாவிற்கு தெரியவந்தது. இதனால் ரம்யா கணவர் வீட்டில் இல்லாமல் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். மேலும் கார்த்திகேயன் வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் வீடு பார்த்து அழைத்து செல்லவில்லை.

இதனால் இருவருக்குமிடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ரம்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில் ரம்யா மற்றும் கார்த்திகேயன் இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் சம்மதத்திற்காக ஏழு வருடங்களாக காத்திருந்தனர்.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருவரும் நன்கு படித்தவர்கள். திருமணத்திற்கு பிறகு கார்த்திகேயன் வீட்டில் கழிவறை கட்டும் பணி நடைபெற்று வந்திருக்கிறது. அதனால் பணி முழுமையாக முடியும் வரை பெற்றோர் வீட்டில் இருக்கும்படி கார்த்திகேயன் ரம்யாவை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்து ரம்யாவும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கழிவறை இல்லாததால் தற்கொலை கொண்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு விஷயமும் உள்ளது. அதில் ரம்யாவின் அப்பாவிற்கு இந்த திருமணத்தில் முழு விருப்பம் இல்லாததாலும், ரம்யாவை அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்து ரம்யா பலமுறை புலம்பியபடி இருந்துள்ளார். மேலும் தாய் வீட்டில் இருக்கும்போது தான் தற்கொலை செய்து கொண்டார் அதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் பெண்கள் கழிவறை இல்லாததால் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். இதற்கு பின்னால் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.