மின்தடையால் மணப்பெண்ணின் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை…!!! அதிர்ச்சியில் புதுமணப்பெண்.

marriage

சிந்து என்ற மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். தனது 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தந்தையின் உதவியுடன் எழுதி வருகிறார். இவரின் நிலையை கண்டு கல்வி செலவையும், மருத்துவ செலவையும் தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த மாணவியை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிந்துவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். சிந்துவின் தந்தை கடை கடையாக சென்று டீ வியாபாரம் செய்பவர். அவருடைய தாயார் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது முழு நேரமாக சிந்துவை கவனித்து வருகிறார். மாணவி சிந்து பத்தாம் வகுப்பு வரை சுட்டிப் பெண்ணாக வலம் வந்துகொண்டிருந்த இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டாக ஒரே அறைக்குள் அகப்பட்டு முடங்கி கிடக்கிறார். இரண்டு கால்களிலும் ஆபரேஷன் செய்தும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. அவருடைய காலில் இருந்து சீல் வடிந்த வண்ணமே இருக்கிறது. விபத்து ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகும் இன்றுவரை பீல் வடிவது குணமாகவில்லை. இவற்றை குணப்படுத்த மருத்துவரீதியான ஏதாவது உதவி கிடைத்தால் நன்றாக இருக்குமென சிந்து எதிர்பார்க்கிறார். அவருக்கு ஏற்பட்ட விபத்தில் அவரது வாய் பகுதியில் சேதம் அடைந்து இருக்கிறது சாப்பிடக்கூட முடியாமல் தவித்து வருகிறார். மேலும் வாலிபால் பிளேயர் ஆக வேண்டும் என்ற கனவோடும், மிலிட்டரியில் வேலை பார்க்கும் என்ற அலட்சியத்துடன் இருந்த சிந்துவின் வாழ்க்கை இந்த அளவிற்கு தலைகீழாக மாறும் என பெற்றோர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

மின்தடையால் மணப்பெண்ணின் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை…!!! அதிர்ச்சியில் புதுமணப்பெண்.

பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் மின் தேவை அதிகரித்துள்ளதால் அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்வெட்டினால் திருமணத்தில் மணமகள் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் அஸ்லானா கிராமத்தில் ராஜேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அப்போது இருவேறு குடும்பத்தை சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்கள் திருமணத்திற்கு தயாராக இருந்தனர். இதையடுத்து இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடத்த ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தின் போது மணப்பெண்கள் முக்காடு போட்டு மூடப்பட்ட இருந்தனர்.

இந்த இரண்டு பெண்களுமே ஒரே மாதிரியான உடையை அணிந்திருந்தனர். திருமண சடங்கு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் திருமண சடங்குகள் நடைபெறும் போது இருட்டில் மணப்பெண்கள் மாறிவிட்டனர். அக்னியை சுற்றி வரும்போதும் பண்டிதரும் இவற்றை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றி சுற்றி வரும்படி செய்து விட்டார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்ற பிறகு தான் தாங்கள் போட்டிருந்த முக்காட்டை விலக்கினார். முக்காட்டை அகற்றியதும் மணமகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது “நான் இந்த பெண்ணை பார்க்கவில்லையே எப்படி மாறினார்கள்” என குழப்பம் ஏற்பட்டது. அப்போது பெண் வீட்டாருடன் மாப்பிள்ளை விட்டார்கள் சண்டை போட்டனர்.

இறுதியில் மின்தடையால் மணப்பெண் மாறிவிட்டதை இருவீட்டாரும் சொல்லி சமாதானம் படுத்துவதற்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. இதுகுறித்து திருமணத்தை நடத்தி வைத்த பண்டிதரிடம் கேட்டபோது மீண்டும் ஒருமுறை சடங்கை நடத்தி விடலாம் என்று கூறி மீண்டும் திருமண சடங்கை நடத்தி வைத்தார். இந்த திருமணத்தால் இரு வீட்டாரிடமும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சமாதானத்தில் முடிவடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

m