முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்…!!! ஆச்சு அசல் யாரை போல இருக்கிறார் தெரியுமா?

kajal

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் காஜல் அகர்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு தனது காதலர் தொழிலதிபர் கௌதம் கிட்சலுவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் உள்ள சொந்த வீட்டில் குடியேறிய அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அதற்கு நீர் என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தையொட்டி தனது மகனுடன் இருக்கும் முதல் போட்டோவை வெளியிட்டுள்ள காஜல் அகர்வால் இது குறித்து தெரிவித்துள்ள உருக்கமான பதிவு: இனிவரும் காலங்களில் ஒரு தாயாக உனக்கு நான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுப்பேன்.

ஆனால் ஏற்கனவே நீ எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்து விட்டாய். குறிப்பாக தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுக் கொடுத்துள்ளாய். என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருக்கிறது என்பதை உணர செய்துள்ளாய்.

என் சிறிய இளவரசனை நீ என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் நீதான் அதை என்றும் மறந்து விடாதே நீ வலிமையானவனாக, அன்பானவனாக, வளர்வாய் என்று நம்பி பிராத்தனை செய்கிறேன். நீ நம்பிக்கையுடன், அன்பாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டுகிறேன்.

அதை ஏற்கனவே உன்னில் பார்க்கிறேன். உன்னை என் மகன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன் என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.