தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் பல இடங்களில் நல்ல வசூல் செய்து வந்தது.
விஜய் படங்கள் என்றாலே படம் சுமாராக இருந்தாலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை கொடுக்கும் அதனால் தான் தியேட்டர் உரிமையாளர்கள் இன்று வரை விஜய்யை வசூல் சக்கரவர்த்தி என்று அழைத்து வருகிறார்கள்.

பீஸ்ட் திரைப்படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு பின்னணி இசை என்று அனைத்தும் நன்றாக இருந்தும் நெல்சனின் அழுத்தமான கதை இல்லாதது பெரிய மைனஸ் ஆக இருந்தது. விஜய் ரசிகர்களே பெரிய ஏமாற்றத்துடன் முதல் நாள் தியேட்டரை விட்டு வெளியில் வந்ததை பார்க்க முடிந்தது.
நெல்சன் கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் பீஸ்ட் திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக விஜய்க்கு அமைந்திருக்கும் ஆனால் தற்பொழுது அவரேஜ் படமாக அமைந்தது.

ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் விஜய்யை திரையில் பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தால் படத்தின் வசூல் சில வாரங்களுக்கு முன்பே 100 கோடியை கடந்து சென்றது. விஜயும் பீஸ்ட் படத்தின் வசூல் நன்றாக இருந்ததால் படக் குழுவினரை அழைத்து தனது வீட்டில் விருந்து ஒன்றை வைத்து அசத்தி இருந்தார்.

பீஸ்ட் திரைப்படம் 250 கோடி மொத்தமாக வசூலித்ததாக ஆங்கில இணையதளம் ஒன்று விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 13 ஏப்ரல் 2011 – 01 மே 2022 வரை பீஸ்ட் படம் அதாவது 19 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை விலாவாரியாக கொடுத்துள்ளார்கள்.

அதில் தமிழ்நாட்டில் 129.5 கோடியும், கேரளாவில் 12 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 18.75 கோடியும், கர்நாடகாவில் 15 .8 கோடியும், ROI ஆறு கோடியும், ஓவர்சீஸ் 68.5 கோடியும் இதுவரை கலெக்ட் செய்து இருப்பதாக தகவல்களை வெளியிட்டு உள்ளார்கள் இதை வைத்து பார்க்கையில் பீஸ்ட் திரைப்படம் 250.55 கோடி தற்பொழுது வரை கலெக்ட் செய்து உள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.