எளிமையான முறையில் மகளுக்கு திருமணம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்…!!! வெளியான திருமண புகைப்படங்கள்.

Rahman

ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானுக்கு சென்னையில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் முத்த மகள் கதீஜா ரகுமான் – ரியாசுதீன் ஷேக் என்பவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

அதில் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும் ஆடியோ இன்ஜினீயரான ரியாசுதீன் ஷேக்கிற்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தநிலையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்துடன் எளிமையான முறையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண விழா முடிந்தபின் மகன் மருமகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த பதிவில் புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் எனவும் அனைவரது அன்பிற்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடும்பத்தினருடன் அவரது தாயார் புகைப்படத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு திரைத்துறையினர் மட்டும் அல்லாமல் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.