ரத்தக்குழாயில் அடைப்பு அறுவை சிகிச்சை முடிந்த 2 நாளிலே +2 தேர்வு எழுத ஆம்புலன்ஸில் வந்த +2 மாணவி…!!! குவியும் பாராட்டுக்கள்.

plus 2 student came in ambulance and wrote plus two exam

திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் கீதா தம்பதியினருக்கு பிறந்தவர் தான் ரிதன்யா. ரிதன்யா திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர் கொள்வதற்காக நன்றாக படித்து வந்த ரிதன்யாக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டதால் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் இதனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ரிதன்யாவிற்கு வயிற்றில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு நெருங்குகிறது ரிதன்யாவின் உடல்நிலையும் இப்படி இருக்கிறது என்று தவித்தார்கள் அவருடைய பெற்றோர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிதன்யா பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு எழுதும் பள்ளிக்கு செவிலியர்கள் உதவியுடன் வந்து தேர்வு எழுதி உள்ளார். ரிதன்யாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆம்புலன்சை அனுப்பி பிளஸ் டூ தேர்வுக்கு அனுப்பி உள்ளார்கள் மருத்துவர்கள்.

சிகிச்சை செய்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுத வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.