ஹோட்டல் அறையில் அன்று இரவு நடந்தது இது தான்..!!! போலீசிடம் விசாரணையில் உண்மையை மறைத்தேன் சித்ராவின் கணவர் ஹேமந்த் ..!!!

vj chitra husband hemanth

சின்னத்திரை நாயகி சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு சென்னையதில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகண்டார்.

சித்ரா தற்கொலை செய்து கொண்டது செய்தி வெளிவந்ததும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது காரணம் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர்.

சித்ராவின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. சித்ரா வெளியில் எங்கே சென்றாலும் முல்லை என்று அழைக்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து மேன்மேலும் பிரபலத்தின் உச்சத்திற்கே சென்றார் சித்ரா.

சித்ரா இறந்த தினத்தன்று அவருடன் இருந்தது அவருடைய கணவர் ஹேமந்த். ஹேமந்த் தான் சித்ராவை கொலை செய்துவிட்டார் என்றும் ஹேமந்த் மோசமானவர் என்றும் சித்ராவின் நெருங்கிய நண்பர்களே பேட்டி கொடுத்து வந்தனர்.

சித்ராவின் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கும் இந்நிலையில் பிரபல மீடியா ஒன்றிற்கு சித்ராவின் கணவர் ஹேமந்த் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஹேமந்த் கூறியிருப்பது ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு சித்ரா சென்றுவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தார். அப்பொழுது சித்ராவின் முகத்தில் பதட்டம் தென்பட்டது நான் சித்ராவிடம் ஏன் என்ன ஆச்சு என்று கேட்டேன். சித்ரா மௌனமாக இருந்தால் எப்போதும் ஷூட்டிங் முடித்துவிட்டு குளியலறை சென்று குளித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்திருப்பார் சித்ரா அதுபோல அன்று குளிக்க குளியல் அறைக்கு சென்றார். சரி குளிக்க தான் போகிறார் என்று நான் வெளியில் நின்றேன் நீண்ட நேரம் ஆகியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை இதுபோன்று என்னை நிக்க வைத்ததும் இல்லை ஒரு சத்தம் மட்டும் கேட்டது உடனே நான் வெறும் காலுடன் ஓடிப்போய் ரிசப்ஷன் சென்று மற்றொரு சாவி கேட்டேன் அவர்களும் பேட்டரி கார் மூலம் வந்து மற்றொரு சாவி போட்டு அறை கதவை திறந்தவுடன் ஷாக்காகி பின்னே வந்தார் அந்த ஹோட்டல் ஊழியர்.

சித்ரா வழக்கம் போல விளையாட்டுத்தனமாக பயமுறுத்துகிறார் என்று நானும் நினைத்துக் கொண்டு தான் அந்த அறையில் சென்று பார்த்தேன் தூக்கில் தொங்கியபடி சித்ரா இறந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.

போலீசாரிடம் பல உண்மைகளை மறைத்து உள்ளேன் அனைத்தையும் நீதிமன்றத்தில் கூறுவேன். உண்மையில் சித்ரா எதனால் இறந்தார் அவருக்கு யாரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியும் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் நான் உண்மையை மறைத்தேன் என்று கூறி உள்ளார்.