சித்ராவின் மரணத்தின் பின்புலத்தில் முக்கிய அரசியல் புள்ளி சிக்குகிறாரா ..? பல திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சித்ராவின் கணவர்..!!!

vj chitra husband openup secret about chitra dead

விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இளம் வயதிலேயே பெரிய வளர்ச்சியை கண்ட சீரியல் நடிகை தனது தாய் தந்தையின் அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி அழகு பார்த்தவர்.

பல நிகழ்ச்சிகள் விழாக்கள் மற்றும் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு நன்றாக சம்பாதித்து வந்த விஜே சித்ரா உயர் ரக AUDI கார் ஒன்றையும் வாங்கி இருந்தார்.

இவருடைய வளர்ச்சியை பார்த்து பலர் சந்தோஷப்பட்டு வந்த நேரத்தில் டிசம்பர் மாதம் 9ம் தேதி அன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கொள்ளை இல்லை என்றும் அவருடன் இருந்த அவரது கணவர் ஹேமந்த் சித்ராவை கொலை செய்துவிட்டார் என்று பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் வர சித்ராவின் கணவர் ஹேமந்த்தை கைது செய்து விசாரித்து வந்தார்கள் காவல்துறையினர்.

தற்பொழுது சித்ராவின் வழக்கு நீதிமன்றத்திற்கு வர இருக்கும் இந்நிலையில் ஹேமந்த் பல திடுக்கிடும் தகவல்களை மீடியாவில் கூறியுள்ளார். சித்ரா எதனால் இறந்தார் என்பது எனக்கு தெரியும் ஆனால் நான் இதுவரை நான் எங்கும் சொல்லவில்லை போலீசார் விசாரணையில் கூட அதை மறைத்துவிட்டேன் கண்டிப்பாக நான் விஜே சித்ரா எதனால் இறந்தார் அவருடைய மரணத்திற்கு யாரெல்லாம் பின் இருந்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். சித்ரா மரணத்திற்குப் பின்பு சில விஷயங்கள் உள்ளது அதனை நான் அன்று போலீசாரிடம் கூறியிருந்தால் என்னுடைய உயிருக்கு ஆபத்தாக போயிருக்கும்.

தற்பொழுது காவல்துறையினரை சந்தித்து என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள் நான் இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்வதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

சித்ரா இறந்த நேரத்தில் நான் இது பற்றி வாய் திறந்து இருந்தால் என்னை இல்லாமல் செய்து இருப்பார்கள் இதற்குப் பின் அரசியல் சம்பந்தப்பட்டவர் இருக்கிறார் அப்போது ADMK ஆட்சி நடந்தது அந்த நேரத்தில் நான் இதை கூறியிருந்தால் அது எனக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் என்று கூறியிருந்தார்.

அவர் கூறியதை கேட்டு கொண்ட பிரபல யூடியூப் சேனல் நெறியாளர் சித்ரா பெரிய பிரபலம் அடைந்த நடிகை. ஒரு நடிகை தற்கொலை செய்து கொள்ள பினான்சியல் ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தமாக இருக்கும் மற்றொன்று பாலியல் ரீதியாக கொடுக்கப்பட்ட தொந்தரவாக இருக்கும் இதில் எந்த விஷயம் என்று அவருடைய கணவர் ஹேமந்த்திடம் கேட்க இரண்டுமே உண்டு என்று கூறினார்.

நெறியாளர் அவரிடம் ஆட்சி மாறியதால் தான் இப்போது சொல்ல முன் வந்தீர்களா என்று கேட்டதற்கு ஆம் அதுமட்டுமல்லாமல் போலீஸ் டிபார்ட்மென்ட் தற்பொழுது நன்றாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது பாதுகாப்பு கொடுக்க சொல்லி அவர்களிடம் கேட்டுள்ளேன். சித்ராவின் மரணத்திற்குப்பின் ADMK சம்பந்தப்பட்ட நபர் இருக்கிறார் மேலும் சில வேறொரு நபர்கள் இருக்கிறார்கள் என்று தயங்கி தயங்கி கூறியுள்ளார். நிறைய விஷங்கள் இருக்கு அதை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்று கூறி உள்ளார்.

சித்ராவின் கணவர் தனது மனைவியின் மரணத்திற்கு பின்புலத்தில் ADMK கட்சியை சார்ந்த சிலர் இருப்பதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.