காதல் ஜெயித்த சந்தோஷத்தில் சமந்தா…!!! எமோஷனல் பதிவு இதோ.

samantha kaathu vaakula rendu kadhal

பிரபல நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முதல் முதலாக பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தனது சினிமா பயணத்தை தொடர்ந்த அவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் சமந்தா சமீபத்தில் தான் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமந்தா விவாகரத்துச் செய்த பின் சமந்தாவின் மார்க்கெட் அவ்வளவு தான் தெலுங்குவில் சமந்தா நிலைத்து நிற்பது கஷ்டம் தான் என்று அக்கட தேசத்து சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் புலம்பி வந்தார்கள் ஆனால் சமந்தா அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு அள்ளி மொத்த கவனத்தையும் தன் மீது திருப்பி இருந்தார். ஓ சொல்றியா மாமா பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்து பட்டி தொட்டி எங்கும் கொண்டாடப்பட்டது.

விவாகரத்து ஆன மனநிலையோடு சமந்தா நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல் சமீபத்தில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்த படத்தில் நயன்தாரா சமந்தா இருவருமே போட்டி போட்டு நடித்து இருந்தார்கள் ஆனால் ரசிகர்கள் என்னமோ சமந்தா வரும் காட்சிகளுக்கு கைதட்டி கொண்டாடி வந்தார்கள்.

சமந்தாவின் அழகும் இயல்பான நடிப்பும் மெருகேற்றிக் கொண்டே போகிறது. கதீஜா என்ற கதாபாத்திரத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்திருக்கும் சமந்தா தனது துள்ளலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கொஞ்சம் கதை சொதப்பி இருந்தாலும் இது சர்ச்சைக்குரிய கதையாக மாறியிருக்கும் அந்த விதத்தில் விக்னேஷ் சிவனை பாராட்டியே ஆகவேண்டும். இரண்டு முன்னணி கதாநாயகிகளை வைத்துக்கண்டு இருவருக்கும் சமமான நடிக்கும் வாய்ப்பினை கொடுத்ததற்கு சபாஷ்.

நேற்று ரம்ஜான் தினத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் ரிசல்ட் பற்றி தகவல்கள் வெளிவந்தது. பல இடங்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக மக்கள் படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில் சமந்தா கூறி இருப்பது கதீஜா இந்த ஜாலியான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும் இது போன்ற கதைக்களத்தில் நடிக்க நான் விரும்புகிறேன் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை விட அதிகமாக வழங்கி உள்ளீர்கள்.

நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் நன்றி என்று தனது நன்றியை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு எமோஷனல் ஆக தெரிவித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் ஜெயித்ததில் சந்தோசமாக இருக்கிறார் சமந்தா.