அஜித் பிறந்தநாள் மாறி மாறி வாழ்த்து தெரிவித்த அதிமுக முக்கிய புள்ளிகள்…!!! ஒரு வேல விஷயம் அதுவா இருக்குமோ? நெட்டிசன்கள் டாக்.

ajith 51st birthday admk ministers wishes

அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று கூறினாலும் அஜித் தலயாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ரசிகர்கள் மனதில். தனக்கென்று ரசிகர் மன்றம் வேண்டாம் உங்கள் குடும்பத்தை பாருங்கள் நேரம் இருந்தால் என்னுடைய படத்தை பாருங்கள் என்று ரசிகர் மன்றத்தை கலைத்தவர். மன்றத்தை கலைத்தாலும் நாங்கள் விடப்போவதில்லை என்று இன்றும் அஜித் ரசிகர்கள் ஒன்றுகூடி அஜித் படங்களுக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விஜய் அஜித் திரைப்படங்கள் வெளியாகும் போது மட்டும் தான் தியேட்டர் திருவிழா கோலத்தில் காணப்படும் ஒரு நேரத்தில் ரஜினி படங்கள் வெளியாகும் போது இருந்த மாஸ் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் தான் உள்ளது.

ஒரு நேரத்தில் சென்டிமென்ட் காட்சிகளை விரும்பாத அஜித் தற்போது கதைக்கு சென்டிமென்ட் காட்சிகளும் தேவை என்று நன்றாக புரிந்து கொண்டு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். மக்களும் அஜித்தின் திரைப்படங்களை குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அஜித்திற்கு இன்று வயது ஐம்பத்தி ஒன்று. உழைப்பாளர் தினத்தன்று பிறந்த அஜித் தன்னுடைய 51வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வர அதிமுகவை சார்ந்த முக்கிய புள்ளிகள் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அஜித்தை புகழ்ந்து வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்.

அது போல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சிறந்த நடிகர்
துப்பாக்கிச்சுடும் வீரர் விமான ஓட்டி கார் பைக் ரேஸர் – என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய Ajithkumar அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் பட வசனம் போலவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிறப்புற அமைய வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துக்களை கூறி உள்ளார்.

ஜெயலலிதா அவர்கள் மீது அஜித் அவர்கள் மரியாதை கலந்த பாசத்துடன் இருப்பார். ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட அம்மா அஜித் அவர்களை சந்தித்து கட்சியில் இணைந்து பணியாற்ற கூறி உள்ளார். அஜித்தும் ஓகே சொல்லிவிட்டார் என்றாலும் புரளி செய்திகள் வெளிவந்தது.

தற்பொழுது அஜித் மீது அதிமுக அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர் என அனைவரும் பாசத்தை மாறி மாறி காட்டுவது குறித்து சமூகவலைத்தளத்தில் பேசும் பெருளாக அமைந்துள்ளது.

மைண்ட் வாய்ஸ்: ஒரு மனுஷன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னது ஒரு குற்றமாயா…