படப்பிடிப்பின் போது பிரபல நடிகையை ரூம்க்கு அழைத்த விமல்…!!! என்ன நடந்தது தெரியுமா பிரபல விநோயோகஸ்தர் புகார்..!!!

distributor complaint against actor vimal

விமல் எதார்த்தமான நடிகர் பாண்டியராஜன் இயக்கத்தில் பசங்க படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த விமல் களவாணி என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி களவாணி படத்தில் விமல் நடித்திருந்தார் அந்த படத்திற்கு பிறகு விமல் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நிச்சயம் ஒரு வெற்றி கதாநாயகனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருடைய நேரமோ என்னமோ தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் சுமாரான படமாக அமைந்தது. விமலை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வந்தது.

மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்த விமல் அந்த படத்தின் மூலம் ஓரளவிற்கு லாபம் பார்த்து தனது கடனை அடைக்க முயற்சி செய்து இருக்கிறார். இந்நிலையில் விநியோகஸ்தர் சிங்காரவேலன் அவர்கள் விமல் மீது அடுக்கடுக்காக புகாரை வைத்துள்ளார்.

அதில் மன்னர் வகையறா திரைப்படம் 4 கோடியில் முடிக்கவண்டிய திரைப்படத்தை விமல்தான் 8 கோடி வரை இழுத்து விட்டதாகவும் விமலால் தான் தேவையில்லாத செலவுகள் 3 கோடிக்கும் மேல் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார் அதுமட்டுமல்லாமல் முதலில் மன்னர் வகையறாபடத்தில் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து மற்றும் சந்தானத்தின் படத்தில் நடித்த வைபவி என்ற கதாநாயகி தான் நடித்து வந்தாராம் 15 நாட்கள் அவரை வைத்து தான் படப்பிடிப்பு நடந்ததாம்.

விமல் மன்னர் வகையறா படத்தில் அப்போது ஹீரோயினாக நடித்த வைபவியை ரூமுக்கு அழைத்து பேசினாராம். நீண்ட நேரத்திற்கு பிறகு வெளியே அந்த நடிகையிடம் இயக்குனர் பேசியுள்ளார் அப்போது நான் இந்த படத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவட்டு சென்றுவிட்டாராம் அதன்பின் தான் கயல் ஆனந்தியை ஹீரோயினாக அந்தப்படத்தில் ஒப்பந்தம் செய்து மீண்டும் முதலில் இருந்து ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தார்கள். இதற்கெல்லாம் காரணமாக தான் அவர் என்ன ரூம் உள்ளே பேசினார் என்று அவரிடமே கேளங்கள் என்று கூறியுள்ளார் விநோயோகஸ்தர் சிங்காரவேலன்.