கலவையான விமர்சனத்தை தாண்டி விஜயின் BEAST செய்த வசூல் எவ்வளவு தெரியுமா….!!! BEAST வெற்றியா தோல்வியா வசூல் நிலவரம் இதோ.!!!

thalapathy vijay beast movie collection

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள். நல்ல நாளே கலவையான விமர்சனத்தை சந்தித்தது பீஸ்ட். விஜய் ரசிகர்கள் சிலரே படம் எங்களுக்கு பிடிக்கவில்லை இயக்குனர் நெல்சன் தளபதி விஜய்யை சரியாக பயன்படுத்தவில்லை நெல்சன் கோட்டை விட்டுவிட்டார் என்று அடுக்கடுக்காக குறைகளை சொல்லிக் கொண்டே வந்தனர்.

பீஸ்ட் படத்தில் விஜய்யை அழகாகவும் ஸ்டைலாகவும் காட்டிய நெல்சன் திரைக்கதையில் கோட்டை விட்டது அனைவருக்கும் பெரிய ஏமாற்றமே. தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏசி அவர்கள் பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் பீஸ்ட் படத்தைப் பற்றி பேசிய அவர் பீஸ்ட் படம் முதல் நாளே பார்த்தேன் அந்தப் படத்தில் இசையமைப்பாளர் இருக்கிறார், ஸ்டண்ட் மாஸ்டர் இருக்கிறார்கள், ஒளிப்பதிவாளர் இருக்கிறார், ஆர்ட் டைரக்டர் இருக்கிறார், ஹீரோ இருக்கிறார் ஆனால் இயக்குனர் இல்லை என்று ஓபன் ஆகவே நெல்சன் இயக்கம் சரியில்லை என்று தெரிவித்திருந்தார்.

பீஸ்ட் படத்துடன் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது கே ஜி எஃப் 2 மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை செய்து வந்தது. பீஸ்ட் திரைக்கதை சரியாக இல்லாதது கேஜிஎப் 2 படம் நல்ல வசூலை செய்ய சாதகமாக இருந்தது. கே ஜி எஃப் 2 திரைப்படமும் நன்றாக இருந்தது.

விஜயின் பீஸ்ட் படத்தின் கலெக்ஷன் பற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை கடந்து விட்டதாகவும் உலக அளவில் பீஸ்ட் திரைப்படம் 200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படமே தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படமான சர்கார் சாதனையை முறியடித்து உள்ளது என்று தகவல்கள் வந்து உள்ளது.

எதிர்மறையான விமர்சனம் அனைத்தையும் கடந்து விஜய் என்ற மனிதனுக்காக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து குடும்ப ரசிகர்கள் பார்த்ததால் தான் இந்த வசூல் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தினர்.