தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்…!!!

vijay

தளபதி விஜய் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் பெரிய ரசிகர் படையை தன் கையில் வைத்திருப்பவர். இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார் இவர் அரசியலுக்கு வரலாமே என்று சக நடிகர்கள் வற்புறுத்தியும் அன்போடு கேட்டுக் கொண்டும் அரசியல் பொருத்தவரை நிதானமாக இருக்கிறார் விஜய்.

அமைதியாக அரசியலை ஆழ்ந்து கவனித்து வருகிறார். தற்பொழுது விஜய்யின் மக்கள் இயக்கத்தில் உள்ள சிலர் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் தரப்பிடம் அனுமதி பெற்றுள்ளனர். இதில் விஜய்யின் மக்கள் இயக்கம் நேரடியாக சப்போர்ட் செய்யாவிட்டாலும் விஜய்யின் பெயரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஊரக ஊராட்சி தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகரப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி கிடைத்துள்ளது. மேலும் அனுமதி கிடைத்ததாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் விஜய் படம் மற்றும் இயக்கக் கொடியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி மற்றும் வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்வார்கள் என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.