பனிசறுக்கில் குழந்தை போல் கீழே விழுந்து புரளும் நடிகை சமந்தா…!!! கியூட் வீடியோவை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.

samantha

சமந்தா ஆரம்பத்தில் வெல்கம் கேர்ள் ஆக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் முரளி அவர்களின் மகன் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் முதல் படமே சமந்தாவிற்கு பெரிய வரவேற்பு கொடுத்தது.

கௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே படத்தை தெலுகுவில் எடுத்து வெளியிட்டார் கவுதம். அந்த படத்தில் நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

தெலுங்கு ரசிகர்களையும் எளிதில் கவர்ந்தார் தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த சமந்தாவின் வாழ்க்கையில் திடீரென்று சில பிரச்சனைகளால் சமந்தா நாக சைதன்யா இருவரும் பிரிந்தார்கள். இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். நாக அர்ஜுன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம் தனித் தனியாகப் பயணிக்க விரும்புகிறோம். இந்த முடிவை நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்தது தான் என்று தெரிவித்திருந்தார்.

அதே அறிக்கையை சமந்தா அவர்களும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் இந்த ஜோடி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின் பல்வேறு சுற்றுலா தலைகளுக்கு சென்று புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

இந்நிலையில் Switzerlandக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் பனிச்சறுக்கு செய்யும் போது கீழே விழுந்து புரளும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.