ராணுவ அதிகாரி லுக்கில் மறைந்த புனீத் ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!!!

puneet rajkumar

புனித் ராஜ்குமார் கன்னட சூப்பர் ஸ்டார். தான் பெரிய நடிகர் என்ற தலைக்கனம் இல்லாத மனிதர் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ரசிகர்களுடன் உரையாடுபவர்.

சூட்டிங் ஸ்பாட்டில் தன்னை பார்க்க ரசிகர்கள் குவிந்துவிட்டால் முதலில் ரசிகர்களை சந்தித்து விட்டு அதன் பின் தான் சூட்டிங் நடக்கும் இடத்திற்கே போவாராம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மீது பிரியம் கொண்டவர்.

புனித் அவர்கள் 2021 அக்டோபர் மாதத்தில் 29 ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். புனித் இறப்பிற்கு அவர் மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சிகள் தான் காரணம் என்று பரவலான தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் புனித் பற்றி நிறைய தெரியாத விஷயங்களும் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

நிறைய நல்ல விஷயங்களை செய்த மனிதன் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரிவிக்காமல் அதனை சத்தமில்லாமல் செய்திருக்கிறார். இறந்தும் தனது இரண்டு கண்ணால் 4 பேருக்கு பார்வை கொடுத்து சென்றார். நூற்றுக்கணக்கான குழந்தைகளை தன் செலவில் படிக்க வைத்த புனித் வயதானவர்களை காக்கும் காப்பகமும் வைத்திருந்திருக்கிறார். மறைந்த கன்னட நடிகர் புனித் அவர்களுக்கு இன்றும் அவரது சமாதியில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

நடிகர் புனித் ராஜ்குமார் தனது மரணத்திற்கு முன்பு கடைசியாக நடித்திருந்த படம் ஜேம்ஸ் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி அவரின் பிறந்தநாள் அன்று திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.