ஜீ தமிழ் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட முன்னணி நடிகை…!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

anbe sivam

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற முதல் பாகத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரக்‌ஷா ஹொல்லா. இந்த தொடரில் மாயனுக்கு ஜோடியாக தேவி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை ரக்‌ஷா பெங்களூருவில் பிறந்தவர்.

நடிகை ரக்‌ஷா பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். தனது படிப்பை முடித்தபின் 22-வது வயதில் நடிக்கத் தொடங்கினார். நடிகை ரக்‌ஷா நன்றாக நடனமாடுவார். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்து பிறகு கன்னட சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் நடித்த ’புட்டிண்டி பட்டு சேரா’ என்ற கன்னட தொடர் மூலம் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். மேலும் தமிழ் சீரியலில் நடிப்பதற்காக தமிழகம் வந்த இவர் வம்சம், தமிழ் கடவுள் முருகன், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்துள்ளார். இவர் நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொரோனா பரவலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அதற்கு பின் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் பகுதி 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ரக்‌ஷா சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “அன்பே சிவம்” என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சில நாட்களாகவே ரக்‌ஷா அன்பே சிவம் சீரியலை விட்டு விலகியதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ரக்‌ஷா கூறுகையில் நான் அன்பே சிவம் தொடரில் இருக்கிறேனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை என்றார். தற்போது இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் நான் அன்பே சிவம் சீரியலில் இல்லை என்பது தற்போது அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நானும் அதை உறுதி செய்கிறேன்.

ஆனால் படக்குழுவினர் இதுவரை என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இதுதான் அவர்களின் வேலை முறை. இதற்காக நான் ஆச்சரியப்படவில்லை. எனக்கு அன்பும் ஆதரவும் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. அடுத்த ப்ராஜெக்டில் சந்திக்கிறேன் என இன்ஸ்டாகிராம் பதிவில் ரக்‌ஷா தெரிவித்துள்ளார் .