திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோரில் முல்லையாக நடிக்கும் காவ்யா…!!! மாஸ்டர் பட நடிகருக்கு ஜோடியாகும் காவ்யா.

kavya

காவ்யா அறிவுமணி தற்பொழுது விஜய் டிவியில் பிரபலமான சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குமரன் என்பவருக்கு ஜோடியாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்தார்.


விஜே சித்ரா தற்கொலைக்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடிக்க தொடங்கினார். தற்போது சின்னத்திரையில் அதிக பாப்புலரான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

தற்போது காவ்யாவிற்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனுக்கு ஜோடியாக காவியா நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ரிப்பபரி என படக்குழு பெயரை வைத்துள்ளது. இந்தப்படத்தில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில் காவியாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.