இரவு நேரத்தில் ஒய்யாரமாக கடற்கரை அழகை ரசித்தபடி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஹன்சிகா…!!! புகைப்படங்கள் இதோ.

hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மொத்வானி. நடிகை ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை ஹன்சிகா நடித்த ஓகே ஓகே திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

நடிகை ஹன்சிகாவை குஷ்புவுடன் ஒப்பிட்டு குட்டி குஷ்பு என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். தற்போது நடிகை ஹன்சிகா கைவசம் மஹா, 105 மினிட்ஸ், பார்ட்னர் ஆகிய படங்கள் உள்ளன.

அதோடு நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தத் திரைப்படத்திற்கு “ரவுடிபேபி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலமாக அறிமுகமாக உள்ளார்.