ஆலியா மானசா சித்து நெருக்கத்தால் பிரச்சனை என்று செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் கடும் கோபத்தில் ஆலியாவின் கணவர் சஞ்சீவ்.

alyamanasa in sidhu wedding reception

சமீபகாலமாக யூடியூப் சேனல்களில் வியூஸ் வாங்க வேண்டும் மற்றும் FOLLOWERS பெற வேண்டும் என்பதற்கான பொய்யான செய்திகளை வெளியிட்டு பார்வையாளர்களை அதிகப்படுத்தி வருகிறார்கள். அப்படி பார்வையாளர்களை தங்களது சேனலுக்கு வர வைக்க வேண்டுமென்றால் நடிகர் நடிகைகளை பற்றி செய்திகள் கூறினால் மட்டுமே சேனல் பிரபலமாகும் என்று நடக்காத ஒரு செய்தியை நடந்தது போலவே பல யூடியூப் சேனல்கள் சித்தரித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ஆலியா மானசாவை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட ஒரு யூடியூப் சேனல் மீது செம டென்ஷனில் இருக்கிறார் அவரது கணவர் சஞ்சீவ்.

அந்த யூடியூப் சேனலில் கூறியிருப்பது சமீபத்தில் தான் சித்து ஸ்ரேயா அவர்களின் திருமணம் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. அவர்களின் வரவேற்புக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அனைவர் கண்ணும் ஆலியா மானசா இந்த நிகழ்ச்சிக்கு வருவார்களா என்று தான் இருந்ததது.

காரணம் சித்து ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார்கள். ராஜா ராணி சீரியலில் ஆலயா சித்து அவர்களின் காதல் காட்சிகள் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது. மலையாள படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகள் என சித்துவும் ஆலியாவும் இளம் ரசிகர்களை சூடாக்கி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் அலியா சஞ்சீவையும் சித்து ஷ்ரேயாவையும் கழட்டி விட்டுவிட்டு ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்று கிசுகிசுக்கள் எல்லாம் எழுந்தன அதனால் தான் ஸ்ரேயா உஷாராகி உடனடியாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது இதனால் ஆலியா திருமணத்திற்கு வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.

சித்து குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் அலியா தனது கணவர் சஞ்சீவ் மற்றும் மகளுடன் வந்திருந்தார். ஆலியா சிந்துவின் திருமணத்திற்கு வந்ததற்கு ஸ்ரேயா மற்றும் சித்து குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும் அவர் காது படும்படி இங்கே எதற்கு வந்தாய் என கூறினார்கள் என்றும் செய்திகள் கசிந்தது. ஸ்ரேயாவும் ஆலியா மேடைக்கு வருவது பிடிக்கவில்லை என்பதால் ஆலியா மேடைக்கு வர தங்கியதாகவும் கூறினார்கள் என்று ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த சஞ்சீவ் செம டென்ஷனாகி உள்ளராம் தற்பொழுது அந்த வீடியோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சஞ்சீவ் NON SENSE என்று திட்டியுள்ளார்.

ஆலியா மானசா அனைவருடன் அன்பாக பழகக்கூடியவர் அவருடன் நடிக்கும் சகநடிகர் மற்றும் நடிகைகளிடம் சகஜமாக பழக கூடியவர். அது போல தான் அவரது கணவர் சஞ்சீவ். சித்து ஆலியா மானசா இருவரும் நல்ல நண்பர்கள். மேல் குறிப்பிட்ட எந்த ஒரு சம்பவம் உண்மை அல்ல என்று கூறி வருகிறார்கள் சின்னத்திரை நண்பர்கள்.

பார்வையாளர்களை தரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளை கொடுப்பதால் பார்வையாளர்களை பெற முடியுமே தவிர அந்த சேனல் மீது நம்பிக்கை தன்மை போகிவிடும் என்பது தெரியாமல் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.