பிரபல ஹீரோவிற்கு தங்கையாக நடிக்கும் அனிதா சம்பத்..!!! ரெடி ஆகிறதா அண்ணாத்த PART 2 ..!!!!

anithasampath sister role in vimal movie

அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போதே பெரிய பிரபலத்தை அடைந்தார் அனிதா. அனிதாவின் ஹோம்லியான தோற்றமும் தமிழ் உச்சரிப்பும் பலரை கவர்ந்தது. ஒரு செய்திவாசிப்பாளர் மீது மக்கள் இவ்வளவு அன்பை வெளிப்படுத்துவர்களா என்று என்னும் அளவிற்கு அனிதா மீது ரசிகர்களிடம் பெரிய கிரேஸ் இருந்தது.

செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சில படங்களிலும் நடித்து வந்தார். காப்பான் என்ற படத்தில் சூர்யாவை பேட்டி காணும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், தளபதி விஜயின் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுப் பிரபலமடைந்தார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரியாஸ்கான் அவர்களின் மகன் ஷரீக் அவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடி டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார்.

தற்பொழுது அனிதா சம்பத்திற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஒப்புக்கொள்ளும் அனிதா தற்பொழுது தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் யார் படத்தில் தெரியுமா நம்ம விமல் படத்தில் தாங்க.

மாடல் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல் பெயரிடப்படாத படத்தில் அனிதா சம்பத் நடிகர் பாண்டியராஜன் உட்பட்ட பல நடிக்கிறார்கள். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதையில் விமல் தந்தையாக நடிகர் பாண்டியராஜன் அவர்கள் நடிக்கிறார் விமலுக்கு தங்கையாக அனிதா சம்பத் இணைகிறார்.

தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுத்திருந்தார்கள் ஆனால் அண்ணன் தங்கை காமினேஷன் காட்சிகள் வலுவாக இல்லாததால் அந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

விமல் அனிதா சம்பத் அண்ணன் தங்கையாக காம்பினேஷன் நன்றாக ஒரக் அவுட் ஆகும் கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாக இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று சந்தேகம் இல்லை.