ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல ஜெய் பீம் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த சந்தானம்.

santhanam opinion about jai bhim movie

நடிகர் சந்தானம் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் காமெடியனாக எவ்வளவு நாள் தான் நடிப்பது நமக்கும் கொஞ்சம் ப்ரோமோஷன் வேண்டாமா என்று சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். பல படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.

இருந்தாலும் ரசிகர்கள் சந்தானத்தின் நகைச்சுவை மிஸ் செய்கின்றோம் நகைச்சுவை என்ற பெயரில் சில காமெடியன்கள் கட்டாயப்படுத்தி சிரிக்க வைக்கும்படி இருக்கிறது என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வந்தனர்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அனைவரும் அவரிடம் விரும்பும் அக்மார்க் காமெடிகள் மிஸ் ஆவதால் சில படங்கள் சரியாக போகவில்லை. A 1 , பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா என்று சமீபத்தில் வெளியான படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்பொழுது சபாபதி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் சந்தானம் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்நிலையில் இன்று நடந்த பிரஸ் மீட்டில் கலகலப்பாக பேசி வந்த சந்தானத்திடம் ஜெய்பீம் படத்தை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு ஜெய் பீம் படம் மட்டும் அல்ல எந்த படமானாலும் சரி யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல என்று கூறிய சந்தானம் தம்முடைய கருத்தை தூக்கி பேசுவது தவறு அல்ல அதே நேரத்தில் அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவது போல பேசுவது தேவையில்லாத விஷயம் சினிமா என்பது இரண்டு மணி நேரம் ஒன்றாக அமர்ந்து எல்லா மதத்தினரும் எல்லா ஜாதியினரும் ரசித்து பார்க்கக்கூடிய இடத்தில் இது தேவைப்படாத விஷயம் என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் ஒரு படத்தை பார்க்காமல் பேசுவது தப்பு தான் ஒரு படத்தை பார்த்துவிட்டு அதை பற்றி பேசுவது சரியான முறையில் விமர்சனம் செய்யலாம் அதைப் பற்றி குறை சொல்லலாம். ஜாதி மதம் எல்லாம் மறந்து ரசிகர்கள் ரசிக்கும்படி நல்ல படத்தை கொடுக்க வேண்டும் அதை செய்து கொண்டிருக்கிறேன் என் தரப்பில் ஏதும் தவறு இருந்தால் நிச்சயமா கேட்கலாம் என்று கூறியுள்ளார்.

ஜெய்பீம் படத்தில் சித்தரிக்கப்பட்ட சில கதாபாத்திரங்கள் சிலரை புண்படுத்துவதாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். சூர்யா நடந்த ஒரு உண்மை சம்பவத்தை நாங்கள் எடுத்துள்ளோம் தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக அந்த படத்தை எடுக்கவில்லை என்று பதில் கொடுத்திருந்தார் ஆனால் சில அரசியல் திரை உலக பிரபலங்கள் சூர்யாவிற்கு சப்போர்ட் செய்து வரும் இந்த நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சூர்யாவின் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பலர் சூர்யா சப்போர்ட் செய்கிறோம் என்று பிரபலங்கள் கூறிவரும் நிலையில் சந்தானம் இப்படி பேசியிருப்பது திரையுலக பிரபலங்கள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.