விருது விழாவில் கணவர் சேதுராமனை நினைத்து எமோஷனலாக அழுத அவரது மனைவி உமா சேதுராமன்..!!! சேதுராமன் பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா..!!!

umasethurmaan won home icon awards 2021

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவு தமிழக மக்களாகிய நமக்கு இன்றும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது காரணம் ஒரு பெரிய நடிகர் 45 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாரே என்ற இறக்க எண்ணம் என்று கூறலாம். புனித் ராஜ்குமார் போல் தமிழ் சினிமாவில் ஒரு க்யூட்டான ஹீரோ மட்டுமல்ல ஒரு மருத்துவரும் கூட மருத்துவர் வி சேதுராமன் அவர்கள் 2020ஆம் ஆண்டு கடந்த வருடம் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவருக்கு வயது 35 இந்த இளம் வயதில் மாரடைப்பால் இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காமெடி நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவரை சினிமாவில் அறிமுகப்படுத்த ஆசைப்பட்ட சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து வாலிபராஜா சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்த இவர் பரிதாபமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தமிழ் திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சேதுராமன் பொருத்தவரை உடல் மீது அக்கறை கொண்டவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் மனிதர் பொதுமக்களுக்கு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவுரைகளை சமூக வலைதளங்கள் மூலம் வழங்கி வந்தார்.

சிரித்த முகத்தோடு எப்போதும் இருக்கும் மனிதர் கடைசியாக மக்களுக்கு விழிப்புணர்வு பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இவருடைய இறப்பை தாங்க முடியாத பலர் சோசியல் மீடியாவில் வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள் இவருடைய நெருங்கிய நண்பர் சந்தானம் சேதுராமனின் இறுதி சடங்கு வரை நின்று அனைத்து காரியங்களையும் செய்தார்.

சேதுராமன் இந்த உலகை விட்டு செல்லும் பொழுது அவருடைய மனைவி உமா அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மார்ச் 26ஆம் தேதி சேதுராமன் இறக்கிறார் ஆகஸ்ட் 3ஆம் தேதி சேதுராமனின் மனைவிக்கு மகன் பிறக்கிறார்.

தன் கணவரை இழந்த சேதுராமனின் மனைவி உமா தனது கணவனின் லட்சியத்திற்கு உயிர் கொடுத்து தன் கணவன் என்னென்ன செய்ய ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் செய்யத் தொடங்கினார். ZI clinic என்ற கிளினிக் ஒன்றை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா வேர்ல்ட் லெவல் நான் கொண்டு போகணும் என்று அடிக்கடி செல்லுவாராம் சேதுராமன். கணவரை இழந்த அவரது மனைவி உமா அவரை நினைத்துக் கொண்டு தனது பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு தற்பொழுது சேதுவின் கனவை நினைவாக்க மருத்துவமனை நிர்வாகத்தை பார்த்து வருவதாக தகவல்.

இந்நிலையில் சேதுராமன் அவர்களின் மனைவிக்கு Home Icon Award 2021 என்ற விருதை தமிழச்சி அவர்கள் கையால் வழங்கப்பட்டது விருதை வாங்கிய சேதுராமனின் மனைவி எமோஷனலாக அழத்தொடங்கினார்கள் என்னை பார்த்து ஒருத்தவங்க மோட்டிவேட் ஆனாலும் எனக்கு சந்தோஷம்.

இது தான் எனக்கு முதல் மேடை என் மனதில் சேது ஓடிக்கொண்டே இருக்கிறார் என்று கண்கலங்கி உள்ளார் பதிவிட்டு உள்ளார் சேதுவின் மனைவி உமா.