65 வயதானவரை திருமணம் செய்த 25 வயது இளம்பெண்…!!! நொந்து நூடுல்ஸ் ஆன 90s கிட்ஸ்.

marriage

திருமணம் முடிந்த நிலையில் சங்கரண்ணா – மேகனா ஆகியோரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் 65 வயதானவரை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா, சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு வருடத்திலேயே மேகனாவில் கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார்.

அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மேகனா இரண்டாவதாக சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்த பேரன் பேத்தி எடுத்த 65 வயதான சங்கரண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இரு வீட்டாரின் அனுமதியுடன் மேகனா மற்றும் சங்கரண்ணாவிற்கு நேற்று அதே சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தங்களின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் சங்கரண்ணா – மேகனா ஆகியோரின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. 90s கிட்ஸ் தனது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.