‘வாகா’ எல்லையில் கையில் தேசிய கொடியுடன் தல அஜித் வெளியிட்ட மாஸ் புகைப்படம்…!!!

ajith

தல அஜித் ‘வாகா’ எல்லையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தல அஜித் தற்போது நடித்து வெளியாக இருக்கும் படம் தான் வலிமை. இந்த படம் ஆரம்பத்திலிருந்து படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் ரசிகர்களிடம் வெளியிடப்படாமல் இருந்த தயாரிப்பு நிறுவனம் அண்மையில் படத்தின் அப்டேட்களை ஒன்றொன்றாக வெளியிட தொடங்கி உள்ளது.

படத்தில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். அஜித்தின் வலிமை படம் வெற்றி இயக்குனர் எச்.வினோத் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயனும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பொங்கல் தினத்தன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வலிமை படப்பிடிப்பு முடிந்ததால் தல அஜித் சமீபத்தில் பைக்கில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தல அஜித் டெல்லி உட்பட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராணுவ வீரர்களுடன் உற்சாகமாக பேசி, தேசியக்கொடியில் கையில் ஏந்தி இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.