பாம்பை கடிக்க விட்டு மனைவியை கொன்ற கணவனுக்கு இரட்டை ஆயுள்…!!!

snake bite

கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன் குற்றவாளி சூரஜ்க்கு கொல்லம் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. நீதிபதி மனோஜ் விசாரணையில் கொலை, கொலை முயற்சி, தடயங்களை அழித்தல், விஷம் மூலம் கொள்ளுதல் என நான்கு பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளி சூரஜ்க்கு நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. குற்றவாளி சூரஜ் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்ததாக மனைவி உத்தரவை சூரஜ் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என உத்ராவின் பெற்றோர் கொல்லம் ருரல் எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சூரஜ் கைது செய்து அவர் மனைவியை பாம்பால் கடிக்க வைத்து கொன்றதை நீதிமன்றத்தில் நிரூபித்தனர். இந்த விசாரணையில் பாம்பாட்டி அரசு தரப்பு சாட்சியாக இருந்ததால் விரைவில் தீர்ப்பு கிடைக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.