பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் குறைந்த வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருப்பது இவரா…!!! ஷாக்கில் ரசிகர்கள்.

Biggboss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் வாரம் முடிவில் போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷனை செய்து உள்ளனர் அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அதில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நமிதா மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது மொத்தம் பதினேழு போட்டியாளர்கள் உள்ளனர். அதில் இந்த வார தலைவர் போட்டியில் வெற்றி பெற்று தாமரைச்செல்வி தலைவராக பொறுப்பில் உள்ளார். அவரை தவிர மற்ற 16 போட்டியாளர்கள் இடையே நாமினேஷன் நடைபெற்றது.

அதில் பாவனி ரெட்டி மட்டும் நாமினேஷன் இல்லாமல் தப்பித்துவிட்டார். மற்ற அனைவரும் நாமினேஷனில் உள்ளனர். பிக்பாஸ் விதிமுறைகளின்படி குறைந்த ஓட்டுகளைப் பெறுபவரே போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார். அதில் மீதம் இருக்கும் போட்டியாளர்களில் யார் வெளியேறுவார் என இந்த வார நாமினேஷன் மக்கள் என்ன முடிவு செய்துள்ளார் என்பது தெரியவரும்.

இந்நிலையில் இதுவரைக்கும் மதிப்பெண் அடிப்படையில் அபிஷேக் தான் கடைசி இடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக சின்ன பொண்ணு குறைந்த மதிப்பெண்களை பெற்று வருகிறார். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களைத் தாண்டி ஸ்ருதி, அபிநய் என வரிசை கட்டிக் கொண்டு இருக்கின்றனர். இதில் யார் வெளியேறுவார் என ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.