செம ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட நடிகை அனிகா…!!!

anikha surendran

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் தான் அனிகா சுரேந்திரன். அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தல அஜித்துடன் விசுவாசம் என்ற படத்தில் அஜித்துக்கு மகளாக மறுபடியும் நடித்தார்.

அந்தப் படத்தில் அப்பா மகள் உணர்வை அழகாக எடுத்துரைக்கும் கதாபாத்திரத்தில் அஜித்தும் அனிகாவும் நிஜ அப்பா மகள் போலவே நடித்திருந்தனர். குறிப்பாக அனிகாவின் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பு விசுவாசம் படத்திற்கு பெரும் ப்ளஸ் ஆக அமைந்தது.

இந்த சிறுவயதிலேயே இப்படி நடிக்க முடியுமா என்று அனைவரும் வியக்கும் வகையில் நடித்து அசத்தினார். சமீபத்தில் அனிகா போட்டோ ஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஸ்கூல் மாணவி போல் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.