ஊராட்சி மன்ற தேர்தலில் 90 வயது மூதாட்டி வெற்றி…!!! எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு.

election

வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளன. தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது.

அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 12ஆம் தேதி எண்ணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் திமுக மாபெரும் வெற்றி பெற்றன. அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். அதோடு அவருடன் போட்டியிட்ட இரண்டாவது வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி சான்றிதழை நேரில் வந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வந்து பெற்றுக்கொண்டார். தனக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஊராட்சி சேர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.