உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது…!!! எத்தனை இடங்களில் தெரியுமா.

vijay

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. அரசியல் கட்சி சார்பாக முதல் முறையாக விஜய் ரசிகர் மன்றத்தின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக முதல் முறையாக வேட்பாளர்கள் போட்டியிட முடிவு செய்தனர். 9 மாவட்ட ஊராட்சி மன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆளும் கட்சியான திமுக பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. மேலும் மக்கள் நீதி மையம், நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் முதல் முறையாக களமிறங்கிய விஜய் மக்கள் மையம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி வாகை சூடி உள்ளனர்.

ஆனால் பல வருடங்களாக விஜயகாந்த் தேமுதிக கட்சி, சீமான் நடத்தி வரும் நாம் தமிழர் கட்சி, கமலஹாசன் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஆனால் முதல் வாய்ப்பில்லையே விஜய் ரசிகர்கள் பலரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

நடிகர் விஜய் அரசியலில் நேரடியாக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமலேயே காலம் தாழ்த்தி வருகிறார். இதனிடையே தந்தையுடனான மோதலில் விஜய் மக்கள் மையம் கலைக்கப்பட்ட தாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய் தலைமையிலான விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களுக்கு போட்டியிட அனுமதி அளித்தார். விஜய் அதனுடன் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்துமாறு கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக தேர்தலில் போட்டியிட ஆயத்தமானார்கள்.

அதோடு கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர் கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக தேர்தல் முடிவில் 51 வார்டு உறுப்பினர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் வெற்றி பெற்று பதவிகளை கைப்பற்றியுள்ளனர். தேர்தல் வெற்றியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.