ரஜினிகாந்தின் மாஸ் போஸ்டருடன் வெளியான அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்…!!!

rajinikanth

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வருகிற 14-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். அந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

இமான் இசை அமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் இணைந்த மூன்றாவது படைப்பாக உருவாகி உள்ள படம் அண்ணாத்த. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படம் தீபாவளி தினத்தன்று வரும் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அண்ணாத்த டீசர் வெளியாக போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். ஏற்கனவே வெளியிடப்பட்ட அண்ணாத்த படத்தின் இரு பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டீசர் வெளியாக இருக்கிறது.