பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் படத்தில் இருந்து தூக்கிடுவேன்…!!! பிசாசு 2 இயக்குனர் அதிரடி.

santhosh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி ஒரு வாரம் கடந்துள்ளது. பிக் பாஸ் சீசன் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல் வார நாமினேஷன் இன்று நடந்துள்ளது இதில் பிக்பாஸில் முதல் திருநங்கை நமிதா மாரிமுத்து திடீரென விலகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 போட்டியில் அதிக அளவில் முகம் தெரியாத போட்டியாளர்களை பங்கேற்றுள்ளனர்.

அவர்களின் உண்மையான முகம் இனிமேல் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்வு செய்ய பல்வேறு பிரபலங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அப்படி தொடர்புகொண்டபோது உடனடியாக நிகழ்ச்சிக்கு வருவதற்கு சம்மதித்துள்ளார் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ள ராமன் கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப்.

அவர் பிக்பாஸ் போட்டிகளில் விதிமுறைகள் நிபந்தனைகள் சம்பளம் போன்ற விபரங்களைக் கேட்டு செல்வதற்கு ஆயத்தமாக இருந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதாக சந்தோஷ் கூறியுள்ளார். நடிகர் சந்தோஷ் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படம் ரிலீஸ் ஆக இருக்கிற தருணத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல யாரை கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க.

அந்த நிகழ்ச்சிக்கு போனால் எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்பது உனக்குத் தெரியாதா. அங்க போய் பெயரைக் எடுத்துக்கிட்டா அது படத்தை பாதிக்காதா. அதனால இந்த நிகழ்ச்சிக்கு போயே ஆகணும் அப்படி நினைச்சீங்கன்னா படத்துல உன்னோட போர்ஷன் தூக்கிடுவேன் தவிர எங்களுக்கு வேற வழி கிடையாது என கண்டிப்பாக கூறினார் மிஸ்கின். அதனால் வேறு வழியில்லாமல் கடைசி நிமிடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என சந்தோஷ் கூறியுள்ளார்.