கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய புன்னகை அரசி சினேகா…!!! DISCO THEME களைகட்டிய பார்ட்டி.

sneha

நடிகை சினேகா மாதவன் ஹீரோவாக நடித்த என்னவளே என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தார்.

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் சினேகாவை பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப பார்த்த ரசிகர்களும் இருக்கிறார்கள். நடிகை சினேகா பிரசன்னா அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். சிநேகாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வரும் சினேகா சினிமாவில் நடிக்காமல் சில வருடங்கள் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வெளியான பட்டாசு என்ற படத்தில் சினேகா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இன்று புன்னகை அரசி சினேகா பிறந்தநாள் அவரது குடும்பத்தினர் அனைவரும் டிஸ்கோ திமில் பிறந்தநாளை ஏற்பாடு செய்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.