ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த 3 வயது குழந்தை பலி…!!!

kishore

கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படும் “ஆல் அவுட்” குடித்த மூன்று வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தில் அடுத்து உள்ள பம்மல் பார்த்திமா நகர், வெள்ளைச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன். அவரது மகன் கிஷோர் மூன்று வயது. நேற்று இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த கிஷோர் ஆல் அவுட் கொசு மருந்தை தவறுதலாக குடித்து உள்ளான்.

இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு 3 வயது குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளான். மேலும் தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதலில் சென்ற தனியார் மருத்துவமனை மருத்துவர் சுபாஷ் மீது கிஷோர் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

மருத்துவர் சுபாஷ் வேறு ஒருவர் மருத்துவரின் பதிவு எண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் பார்ப்பதாக புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் சுபாஷ் தேடிவருகின்றனர். அவர் நடத்தி வந்த மருத்துவமனை பூட்டப்பட்டுள்ளது.