தமிழக முதல்வரை சந்தித்து செய்திவாசிப்பாளர் பனிமலர் கேட்ட கேள்வி..!!! சிரித்த முதல்வர் அப்படி என்ன கேட்டுள்ளார் தெரியுமா..!!!

newsreader panimalar meets tamilnadu cm mkstalin

பனிமலர் பன்னீர்செல்வம், சமீபகாலமாக செய்தி வாசிப்பாளர்கள் பிரபலம் அடைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே முன்பெல்லாம் சீரியலில் நடித்து பிரபலம் தேடி சினிமாவில் நடிப்பார்கள் இப்போதெல்லாம் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து அதில் கிடைக்கும் பின்புலத்தில் தனக்கென்று ரசிகர்களை வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு நல்ல சீரியலில் நடித்து தனக்கென்று ஒரு பெயரை வாங்கிக் கொண்டு சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைக்கின்றனர் அந்தவகையில் பனிமலர் பன்னீர்செல்வம் அனைவருக்கும் பிடித்த செய்திவாசிப்பாளர்களில் ஒருவர் இவர். பனிமலர் முதல் முதலாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

தமிழக முதலவரை சந்தித்த பின் பனிமலர் கூறியது 5 நாட்கள் முன்பு முதலமைச்சர் எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது புகைப்படம் எடுக்கக் காத்திருந்து முடியாமல் போனது. இன்று காலை அலுவலகத்திற்கு வரும்போதே எப்போதும் இல்லாமல் தலைவர் அலுவலகம் முன்பு இருக்கும் பாதுகாவலர் அக்கா ஒருவரிடம் இன்று சிஎம் வருவாரா எனக் கேட்டேன், இல்லை வரமாட்டார் என்றார்.

நானும் என் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஐடி கார்ட் காரில் இருந்தது அதனை எடுக்கக் கீழே போனேன். தலைவர் கார் வந்து நின்றது. எப்பொழுதும்போல பரபரப்போ, கூட்டமோ இல்லை. என்னைப் பார்த்ததுமே “திடீர்னு வந்துருக்காருப்பா,” என பாதுகாவலர் அக்கா சொன்னார். தலைவரைப் பார்க்க வேண்டும் என ஒரு அண்ணாவிடம் சொன்னதும், அவர் ஒரு சீட்டை எழுதி கையில் கொடுத்துக் காத்திருக்கச் சொன்னார். “தலைவரப் பாக்க வெறும் கையோடவா போவிங்க?” என்று கேட்டவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னாடியே இருக்கும் கலைஞர் கருவூலத்திற்கு சென்று, பிறகு பணம் தருவதாகச் சொல்லி இரண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு கீழே வந்தேன். அடுத்த நொடியே தலைவர் அறைக்குள் அனுப்பிவிட்டனர்.

ஒரு குடும்பம் பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தார்கள். அடுத்து நான். கைகளெல்லாம் சில்லிட்டுவிட்டது. உள்ளே சென்றதும் கலைஞர் டிவி ஊழியர் என அறிமுகம் செய்தார்கள். “வாங்க” என அழைத்தார். “என்ன பண்றீங்க?” எனக் கேட்டவாறே புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். புகைப்படம் எடுத்ததும், “உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் சார்,” என்றேன்.

“சொல்லுங்க,” என்றார் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே

“நீங்க ரொம்ப எக்ஸ்ப்ரசிவ் இல்ல சார். உங்கள பாராட்டும்போதும் ரொம்ப சந்தோசபட்றதில்லை. மற்ற நேரங்களிலும் எந்த உணர்வையும் உங்க முகம் அவ்ளோ சீக்கிரம் வெளிக் காட்டுவதில்லை. ஆனா உங்க செயல்பாடுகள், திட்டங்கள் அவ்வளவு உணர்வுப்பூர்வமா இருக்கு. பாதிக்கப்பட்டவர்கள், எளியவர்களிடம் பேசும்போதும், ஏன் ஓபிஎஸ் அவர்களோட மனைவி இறந்தபோது நீங்கள் ஆறுதல் சொன்னதிலும் கூட அவ்வளவு கனிவும் அக்கறையும் தெரிஞ்சுச்சு. நான் அதை உணர்ந்தேன். எப்பயும் இப்படியே இருங்க. நீங்க எங்க முதல்வரா கிடைச்சதுல நாங்க ரொம்ப பெருமைப்பட்றோம், சந்தோசமா உணர்றோம். தமிழ்நாடு ஆசீர்வதிக்கப்பட்ட மாதிரி உணர்றோம், என்றேன்.

அடிக்கடி நாம் காண முடியாத ஒரு பெரிய சிரிப்பு சிரித்தார். 😍😍😍😍😍 என்று சந்தோசப்பட்டு பகிர்ந்து கொண்டார்.