பிக்பாஸ் பவனி ரெட்டி பற்றி இணையத்தில் உலாவரும் தவறான செய்திக்கு அவசர விளக்கம் கொடுத்த அவரது சகோதிரி.

pavni reddy sister post about pavni wedding life

பவானி ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு தொடர்களில் நடித்து பிரபலமானவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சின்னதம்பி சீரியல் பவானி ரெட்டிக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது.

பவானி ரெட்டி தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் அவர்களை காதலித்து காதலர் தினத்தன்று திருமணமும் செய்து கொண்டார் ஆனால் திருமணமான மூன்று மாதங்களிலேயே அவருடைய கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததை தாங்கமுடியாத பவானி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். நோய் எதிர்ப்பு சக்தி கூறினால் உடல் நல குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த பவானி கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்து மறுபடியும் நடிக்க வந்தார் அப்போதுதான் பவானி ரெட்டிக்கு சின்னத்தம்பி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு பிரபலமடைந்தார்.

பவானி மீண்டும் ஒருவரை காதலித்து வருகிறார் அவருடன் வெளியில் சுற்றி வருகிறார் டேட்டிங் சென்று வருகிறார் என்று செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க தற்பொழுது பிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் பவானி. மீடியாவில் அடிக்கடி பவானி பற்றி வரும் தவறான செய்திகளை பார்த்த பவானியில் மூத்த சகோதரி சிந்த அவர்கள் தனது தங்கை மிகவும் நல்லவள் அவளைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறாக செய்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் அதனைத் தொடர்ந்து பவானி அவரது கணவர் பிரதீப்குமார் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளவில்லை பவானி அவள் கணவர் மீது மிகவும் பாசத்துடன் இருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான தம்பதியாக தான் வாழ்ந்து வந்தனர்.

அவர் மறைவிறகு பிறகும் அவரின் நினைவுகள் அவளை விட்டு நீங்கவில்லை அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு என்றும் பசுமையான நினைவுகளே ஆனால் அவர் சமீபகாலமாக வேறொருவரை விரும்பினால் நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தரவேண்டும் என்று நினைத்தோம் ஆனால் சில பல காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்தனர் அவள் கடந்த 4 வருடங்களாக தனது கணவரின் மறைவுக்குப் பின் தனது வாழ்க்கையை மிக கண்ணியமாக தைரியமாக வாழ கற்றுக்கொண்டா ள் தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக உள்ளார்.

Pavani Reddy with Husband

எனவே அனைத்து ஊடக பணியாளர்களும் ரசிகர்களும் மற்றும் அவளுடைய நலன் விரும்பிகளும் அவளின் உணர்வுகளையும் தனிநபர் உரிமைகளையும் மதித்து அவளின் இந்த பயணத்தில் உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் அளிக்குமாறு நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் என்று உருக்கத்தோடு பதிவிட்டுள்ளார் பவானியின் சகோதரி சிந்து.