அழகிய ரோஜாவுடன் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் லொஸ்லியா…!!!

losliya

இலங்கை செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை தமிழில் பேசி தமிழக ரசிகர்களை கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் லாஸ்லியாவுக்கு திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன. பிறகு லாஸ்லியாவுக்கு ஹர்பஜன் சிங்குடன் “பிரண்ட்ஷிப்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தில் லாஸ்லியா பாடல் ஒன்றைப் பாடி அசத்தியிருப்பார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் ஆரிவுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம், கே.எஸ்.ரவிக்குமார் உடன் கூகுள் குட்டப்பன் என்ற படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்கள் புகைப்படங்களை வெளியிடுவதே வாடிக்கையாக கொண்டுள்ளார்.