பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நமீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா..!!! வெளியான தகவல்.

bigboss tamil namitha marimuthu

நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அவரவர் கதைகளை கூறி வந்தனர் அப்பொழுது நமீதா எப்படி திருநங்கை ஆனார் என்பதை விலாவரியாக எடுத்துக் கூறினார். விளக்கமாக எடுத்துக் கூறிய நமீதா தானும் கதறி அழுதார் பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்தார் அந்த அளவிற்கு அவர் பட்ட கஷ்டங்கள் இன்னல்களை எடுத்து ஒளிவு மறைவு இன்றி கூறியிருந்தார்.

நாடோடிகள் படம் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 40 படங்கள் நடித்து இருக்கிறார் நமீதா. இவருடைய உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களின் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டங்களை எடுத்துச் சொல்லி அழுத நமீதாவை போட்டியாளர்கள் அனைவரும் கட்டி பிடித்து ஆறுதல் கூறி வந்தனர் குறிப்பாக இமான் அண்ணாச்சி நமீதாவின் அழுகையை நிறுத்த சொல்லி எழுந்து சென்று கட்டி பிடித்து ஆறுதல் கூறினார்.

திருநங்கைகளை இந்த சமுதாயம் ஏன் ஒதுக்குகிறது அவரது பெற்றோர்களின் ஒதுக்குகிறார்கள் என்று கேள்வியை எழுப்பினார் நமீதா தற்போது நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ஒரு வாரம் கூட ஆகாத இந்த நேரத்தில் திடீரென்று நமிதா ஏன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தார் ஒருவேளை பிக்பாஸ் வீட்டைவிட்டு சேனல் அனுப்பி உள்ளதா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது.

நமீதா திடீரென்று பிக்பாஸை விட்டு வெளியேற காரணம் நமீதாவின் உடல் நிலை தான் என்றும் நமீதா கேட்டுக் கொண்டதால் மட்டுமே அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி உள்ளார்கள் என்றும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் நமீதா அவர்கள் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் உள்ளார் என்று அறிவித்து உள்ளார் வேற எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை.