தஞ்சையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு…!!! ஒரே நாளில் குழந்தையை கண்டுபிடித்து அசத்திய தஞ்சை போலீஸ்.

baby

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த குணசேகரன் 24 கட்டிட தொழிலாளி மனைவி ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ராஜலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணி ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4ஆம் தேதி தஞ்சையிலுள்ள ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். ராஜலட்சுமிக்கு 5ம் தேதி காலை பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் ராஜலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டில் ஒரு பெண் தனது உறவினர் பிரசவத்திற்காக வந்ததாக தெரிவித்துள்ளார். ராஜலட்சுமி உடன் சகஜமாக பழகி வந்துள்ளார். மேலும் ராஜலட்சுமிக்கு உதவுவதுபோல் நடித்துள்ளார். இதையடுத்து நேற்று அந்தப் பெண் குழந்தையை கட்ட பையில் போட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

இதனை அறிந்த ராஜலட்சுமி பதற்றம் அடைந்து உள்ளார். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ராஜலட்சுமிக்கு உதவியது போல் நடித்துக் கொண்டிருந்த பெண் தான் குழந்தையை கடத்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை மீட்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை பட்டுக்கோட்டையில் போலீசாரால் பத்திரமாக நீக்கப்பட்டு உள்ளார். இதனை அறிந்த மக்கள் ஒரே நாளில் கண்டுபிடித்ததால் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.