நடைப்பயிற்சியில் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் பாராட்டிய முதியவர்…!!!

stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் பல பணிகள் செய்து வந்தாலும் உடற்பயிற்சி செய்வது நடைபயிற்சி ஆகியவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். முதல்வர் நடைப்பயிற்சி செய்யும்போது பொதுமக்கள் அவரை சந்தித்து பேசுவது வாழ்த்து தெரிவிப்பது போன்றவற்றை முதல்வர் பொறுமையாக நின்று கேட்டு பதில் அளித்துவிட்டு செல்வது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் பணி சுமைகள் இருந்தாலும் மறுபக்கம் மக்களின் நேரடியாக தொடர்பில் இருந்து அவர்களை கவனித்து வருகிறார். அவர் தினமும் சென்னை அடையாற்றில் பிரம்ம ஞான சபையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் பேசிய முதியவர் கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் மக்கள் அச்சமின்றி வெளியே சென்றுவர முடிகிறது, என்றும் நிர்வாகிகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், லஞ்சத்தை ஒழித்து இந்தியா அளவில் தமிழ்நாடு முதலிடத்திற்கு வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வரை எதிரே வந்த பெண் சந்தித்து முதல்வரை பார்த்து வணக்கம் கூறிய பிறகு உங்களை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஒன்னே ஒன்னு சொல்லணும் இதே மாதிரி எப்பவும் இருந்தா உங்கள் சேவை சிறப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். அதைக்கேட்ட ஸ்டாலின் சரி கட்டாயம் என சொல்லிவிட்டு தன்னுடைய நடைபயிற்சியை தொடர்ந்தார்.