சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேரும் டிக்கிலோனா அனகா…!!! சந்தானம் பட நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.

anagha

கோழிக்கோடு அனகாவுக்கு பறவ என்ற மலையாள படம்தான் நல்ல அடையாளம் கொடுத்தது. ரோசாப்பூ உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், நட்பே துணை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். குணா 369 மூலம் தெலுங்குக்கு சென்றார். டிக்கிலாேனா படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த அவர், படத்தில் போட்ட ஆட்டம் அனைவரையும் கவனிக்க வைத்தது. தற்போது வைபவ் ஜோடியாக பஃபூன் என்ற படத்தில் இலங்கை அகதியாக நடிக்கிறார்.

தவிர, 2 தெலுங்கு படங்களில் நடிக்கிறார். பிற மொழிகளில் கவனம் செலுத்தினாலும், தாய்மொழியை விடாமல் பிடித்துக் கொண்டிருக் கிறார். மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் பீஷ்ம பருவம் என்ற படத்தில் மம்மூட்டியுடன் நடிக்கிறார். இது கேங்ஸ்டர் கதை.

இது குறித்து அனகா கூறுகையில், ‘சின்ன வயதில் நான் பார்த்து ரசித்து வியந்த மம்மூட்டியுடன் இணைந்து நடிப்பதை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. என் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவற்றியுள்ளது. தமிழில் டிக்கிலரேனா படத்தின் மூலம் எனக்கு கிடைத்துள்ள வரவேற்பு புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது.

பஃபூன் படத்துக்காக இலங்கை தமிழ் பேச கற்றுக்கொண்டேன். வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள். விஜய் போன்ற ஹீரோக்களுடன் நடிக்கும் ஆசை எல்லரேரையும் போல் எனக்கும் இருக்கிறது. மம்மூட்டியுடன் நடிக்கும் கனவு நனவானது போல் இந்த ஆசைகளும் நிறைவேறும் என்று நம்புகிறேன். நயன்தாரா மாதிரி கமர்ஷியல் ஹீரோயினாக ஜெயிக்க வேண்டும். மீரா ஜாஸ்மின் போல் விருதுகள் வாங்க வேண்டும். இது என்னுடைய இன்னொரு கனவு” என்றார்.