மாஸ்டர் படம் கொடுத்த சங்கடத்தினால் தூக்கத்தை இழந்தேன்..!!! ஆனால் மனம் திறந்த மாஸ்டர் தயாரிப்பாளர்.

thalapathy vijay master movie

கொரோனா காரணத்தால் திரையரங்குகள் பல மாதங்கள் மூடிக்கிடந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை பெரிய நஷ்டத்தை சந்தித்து வந்தனர். நஷ்டத்தை சரிசெய்ய வேண்டுமென்றால் விஜய்யின் மாஸ்டர் படம் திரைக்கு வந்தால் மட்டுமே முடியும் என்பதில் திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக இருந்தனர்.

அதுபோல விஜய்யும் மாஸ்டர் திரைப்படத்தை எவ்வளவு நாள் ஆனாலும் சரி திரையரங்கில் தான் வெளியிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். விஜய்யின் பிடிவாதம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரிய சந்தோஷமாக இருந்தாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சற்று பயத்தை ஏற்படுத்தியது காரணம் நாட்கள் ஆகி கொண்டே போனால் படத்தின் பிசினஸ் பாதிக்கப்பட்டால் பெரிய நஷ்டம் ஆகிவிடும் என்று பேச்சு நிலவி வந்தது இருந்தாலும் விஜய் எடுத்த திட்டவட்டமான முடிவால் மாஸ்டர் படம் பெரிய ரிஸ்க் எடுத்து திரைக்கு வந்தது.

விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் தியேட்டருக்கு அலைமோதியது மக்கள் அனைவரும் தியேட்டருக்கு வந்து என்ஜாய் செய்து படத்தை பார்த்து ரசித்தனர். தியேட்டர் ஓனர் களுக்கு பெரிய திருப்பத்தையும் பெரிய லாபத்தையும் மாஸ்டர் கொடுத்தது ஆனால் மாஸ்டருக்கு பிறகு இன்றுவரை சரியான படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வரவில்லை என்பது வருத்தமே

சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாஸ்டர் படத்தின் இயக்குனர் சேவியர் பிரிட்டோ அவர்கள் மாஸ்டர் படம் பற்றி முதன்முதலாக மனம் திறந்தார் அதில் என்னிடம் விஜய் முதலில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்வோம் என்று கூறிவிட்டார் நானும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் என்ன ஆனாலும் ரிலீஸ் செய்வோம் என்று கூறினேன்.

மாஸ்டர் படத்தினால் எத்தனையோ நாட்கள் தூக்கம் இல்லாமல் இருந்தேன் என்னுடைய பிசினஸில் கூட இப்படிலாம் இல்லை அதன் பின் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

SAC அங்கிள் மேல உள்ள ரெஸ்பெக்ட் நான் நிறைய பணங்களை விட்டுக் கொடுத்தேன். அது போல சினிமாவில் அனுபவத்தை பெற்றேன் நிறைய தெரிந்து கொண்டேன். ஆனால் XB கிரியேட்டர்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. மாஸ்டர் படம் வெளிவந்து திரையுலகிற்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.