இறுக்கி அணைத்து வருங்கால கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நயன்தாரா..!!! நயன்தாரா ஏற்பட்டால் ஷாக் ஆன விக்கி.

vigneshshivan birthday celebration

விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படம் சற்று ஓகேவான படமாக இருந்தாலும் அதனை தளபதி விஜய்யின் துப்பாக்கியுடன் ரிலீஸ் செய்ததால் போடாபோடி படம் பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் போனது.

அதனைத்தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் என்ற படத்தை விஜய்சேதுபதி நயன்தாரா வைத்து எடுத்தார் அந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து தான் நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலிக்க தொடங்கினார்.

தற்போது பெற்றோர்கள் முன்னிலையில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் முடித்துக் கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்கள். சமீபத்தில் நயன்தாரா அவரது தாயின் பிறந்தநாளை தனது வருங்கால கணவர் விக்கியுடன் கொண்டாடினார்.

காத்துவாக்குல 2 காதல் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விக்னேஷ் சிவன் இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். தனது வருங்கால கணவருக்காக நயன்தாரா பிறந்த நாள் தினமான இன்று பெரிய கேக் ஒன்றை ஆர்டர் செய்து சிறப்பு ஏற்பாடு செய்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதனைப் பார்த்த விக்னேஷ் சிவன் தங்கமே ரொம்ப நன்றி உங்களுடைய பர்த்டே கிப்ட்க்கு என்று பதில் அளித்துள்ளார்.