குக் வித் கோமாளி அஸ்வின்க்கு அடித்த ஜாக்பாட்..!!! பிரபல இயக்குனருடன் இணைகிறார்…!!! வெளியான செம அப்டேட்.

ashwin kumar prabhu solomon project

தமிழ் சினிமாவில் அரவிந்த்சாமி மாதவன் ஆர்யா போன்ற ஹேண்ட்சம் நடிகர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் தான் குக் வித் கோமாளி அஸ்வின். பார்க்க செம ஸ்மார்ட்டாக இருக்கும் அஸ்வினுக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஸ்வின் சில ஆல்பம் சாங்கிலும் நடித்திருந்தார் குறிப்பாக கண்ண வீசி என்ற ஆல்பம் பாடல் பெரிய ஹிட்டானது. அதுபோல சமீபத்தில் வெளியான அடிபொலி பாடல் அஸ்வினுக்கு இன்னும் பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

தற்பொழுது என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வின் தனது இரண்டாவது படம் பிரபல இயக்குனர் பிரபுசாலமன் அவர்களுடன் கை கோர்த்துள்ளார். பிரபுசாலமன் என்றாலே வித்தியாசமான கதைக்களம், கண்ணுக்கு இதமான லொக்கேஷன் என்ற டெம்ப்ளேட்டில் படம் இருக்கும்.

அஸ்வினுடன் இணையும் இந்தப் படத்தை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கொடைக்கானலில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபுசாலமன் அஸ்வின் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.