பிறந்தநாள் தினத்தில் மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை மீனா..!!! நைனிகா நல்ல வளர்ந்துட்டாங்களே.

meena birthday special

நைனிகா தளபதி விஜயின் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தி இருந்தார் அந்த படத்தில் இவருடைய சுட்டித்தனமானநடிப்பு அனைவரையும் ரசிக்கவைத்தது குறிப்பாக விஜயை பார்த்து பேசும் தெறி பேபி என்ற டயலாக் மிகவும் பிரபலமானது.

அம்மாவைப் போல மிகப் பெரிய நடிகையாக வலம் வருவார் என்ற நம்பிக்கை இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் இருந்தது. அம்மா மீனாவும் சிறுவயதிலிருந்தே நடிக்கும் ஆர்வம் கொண்டவராக இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சில வருடங்களில் கழித்து ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதுபோல நைனிகா விஜய்க்கு ஜோடியாக எதிர்காலத்தில் நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.

தற்பொழுது படிப்பில் ஆர்வம் காட்டி வரும் நைனிகா சின்ன சின்ன கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் படிப்பை முடித்தபின் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆக வாய்ப்புகள் உள்ளது.

இன்று நடிகை மீனா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சில போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் தனது மகள் நைனிகா உடன் சிரித்தபடி கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மீனா.