மாணவர்களே இனி இந்த அரசை நம்பாதீர்கள்..!!! மருத்துவர் தான் ஆக வேண்டும் என்பது இல்லை – எடப்பாடி பழனிச்சாமி

soundharya neet suicide

நீட் தேர்வினால் மேலும் ஒரு உயிரிழப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி நீட் அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இறந்த மாணவி சௌந்தர்யா குடும்பத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அதில் நீட்டுக்கு மேலும் வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம், தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து பெற்றோராக எனது மனவருத்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

நான் 14 9 2019 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி உடனே ஆசிரியர் உளவியல் நிபுணர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வழங்குங்கள் என்று திமுக அரசை கேட்டு கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களே விபரீதமான இத்தகைய முடிவினை இனி ஒருபோதும் எடுக்காதீர்கள் என்று உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். மாணாக்கர்களே இனி இந்த அரசை நம்பாதீர்கள். நான் நேற்று கூறியது போல் மருத்துவர் தான் ஆக வேண்டும் என்று இல்லை 42க்கும் மேற்பட்ட மருத்துவ இணை படிப்புகள் உள்ளன என்று அதனை பட்டியலிட்டுள்ளார்.

அத்துடன் மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவார் அவன் நெஞ்சம் ஒரு நெருப்பு அவன் நேர்மையின் மறுபிறப்பு என்ற பாடல் வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன் மாணவி சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்